தினம் ஒரு திருக்குறள்

Showing posts with label அதிர்ச்சியான தகவல்கள். Show all posts
Showing posts with label அதிர்ச்சியான தகவல்கள். Show all posts

Tuesday, February 28, 2012

பிரேசிலில் 10 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிற்பம் கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)


பிரேசிலில் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு செதுக்கப்பட்ட பாறை சிற்பத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். 12 இஞ்ச் அளவுள்ள அந்த சிற்பத்தில் மனிதனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளன.

தலை சி வடிவத்தில் காணப்படும் இச்சிற்பத்திற்கு 2 கைகளிலும் தலா 3 விரல்கள் உள்ளன. இதை வைத்து அமெரிக்க கண்டங்களில் மக்கள் குடியேற்றம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.



Monday, February 27, 2012

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்: அறிமுகமாகி​யுள்ள புதிய துவிச்சக்கர வண்டி (வீடியோ, படங்கள் இணைப்பு)

நாம் பொதுவாக எமது உடலை திடகாத்திரமாக பேணுவதற்கென ரெட்மில் என்ற உடற்பயிற்சி உபகரணத்தை வீட்டிலோ அல்லது ஜிம் சென்டர்களிலோ பயன்படுத்துவோம்.

இவ்வாறான செயற்பாட்டினால் பலன் கிடைக்கின்ற போதிலும் எமது நேரம் வீணடிக்கப்படுகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வாக தற்போது புதிய வகை சைக்கிள்கள்(துவிச்சக்கர வண்டி) அறிமுகமாகியுள்ளது.

இதன் மூலம் நாம் பயணம் செய்ய முடிவதுடன் ரெட்மில் போன்ற அமைப்பு காணப்படுவதனால் அதனூடாக எமது உடலையும் திடகாத்திரமாக பேண முடியும்.

இதனால் எமது நேரம் சேமிக்கப்படுவதுடன் எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படுகின்றது. ஏறத்தாழ 6 அடி நீளமான இந்த சைக்கிளின் பெறுமதி 1,800 அமெரிக்க டொலர்கள் ஆகும்.



நாளை உலகின் குள்ளமான மனிதனாக முடி சூடவுள்ள நேபாளி!


நாளைய தினம் உலகின் குள்ளமான மனிதனாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் முடிசூடவுள்ளார் நேபாளி. 22 இஞ்சிகள் மட்டுமே உயரமான 72 வயதான Chandra Bahadur Dangi என்ற முதியவர் நாளை உத்தியோகபூர்வமாக உலகின் குள்ளமான மனிதனாக முடிசூடவுள்ளார்.

இன்றைய தினம் வரை உலகின் குள்ளமான மனிதனாக இருக்கும் 18 வயதான Filipino Junrey Balawing என்ற 23.5 இஞ்சிகள் உயரமுள்ள இளைஞனின் சாதனைய முரியடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








பிரித்தானியாவில் ஒரே கருவில் பிறந்த மூன்று குழந்தைகள் (படங்கள் இணைப்பு)

பிரித்தானியாவில் வசிக்கும் ரச்சீல்(31), ஆஸ்லி(29) என்ற தம்பதியினருக்கு ஒரே கருவில் மூன்று ஆண்குழந்தைகள் பிறந்து ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக ஒரு கருவில் ஒரு குழந்தை பிறப்பது தான் வழக்கம் சிலசமயங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதுண்டு. எனினும் இவ்வாறு மூன்று குழந்தைகள் பிறப்பது மிக மிக அரிதான சம்பவம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.



இன்று இரவு ஒரே நேரத்தில் 4 கிரகங்கள் பார்க்கலாம் : இந்திய விஞ்ஞானி தகவல் |



இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை பிரகாசமாக தெரியும்

சூரியனைச் சுற்றி வரும் 4 கோள்களை இன்றிரவு ஒரேசமயத்தில் பார்க்கலாம்
பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் அய்யம் பெருமாள் தகவல்

சூரியனைச் சுற்றி வரும் வியாழன், வெள்ளி, செவ்வாய், சனி ஆகிய 4 கோள்களையும் இன்று இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை வானத்தில் ஒரேநேரத்தில் தனித்தனியாக பார்க்கலாம்.

இதுகுறித்து சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-

வானில் சூரியனை வெள்ளி கோள் ஒரு தடவை சுற்றி வருவதற்கு 223 நாட்களும், செவ்வாய் கோள் ஒரு தடவை சுற்றி வருவதற்கு 687 நாட்களும், வியாழன் கோள் ஒரு தடவை சுற்றி வருவதற்கு 11 ஆண்டுகள் 8 மாதங்களும், சனி கோள் ஒரு தடவை சுற்றி வருவதற்கு 29 ஆண்டுகள் 8 மாதங்களும் ஆகின்றன. இந்த கோள்கள் வேகமாகவும், மெதுவாகவும் செல்லும். அவ்வாறு செல்லும்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒரே சமயத்தில் இந்த நான்கு கோள்களும் வானில் தனித்தனியாக புள்ளி வடிவத்தில் பிரகாசமாக தெரியும்.

இன்றிரவு வானத்தின் மேற்கு பகுதியில் வெள்ளி கோளும், வியாழன் கோளும் தெரியும். வானத்தின் கிழக்குப் பகுதியில் செவ்வாய் கோளும், சனி கோளும் தனித்தனியாக தெரியும். இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை இதனை வெறும் கண்ணால் பார்க்கலாம். அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதால், இதனை வானத்தின் அதிசய நிகழ்வு என்று சொல்ல முடியாது.

1999-ம் ஆண்டு இந்த நான்கு கோள்களும் ஒரேநாளில் வானத்தின் கிழக்கு பகுதியில் தனித்தனியாக தோன்றியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, February 26, 2012

சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய சார்ஜர் மரம் அறிமுகம்


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விவியன் முல்லர் என்ற விஞ்ஞானி சோலார் இலைகளுடன் கூடிய போன்சாய் சார்ஜர் என்ற மரம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
மரங்களை தொட்டியில் வளர்க்கும் கலைக்கு போன்சாய் என்று பெயர். இக்கலையையும், சோலார் தொழில்நுட்பத்தையும் சேர்த்து போன்சாய் சார்ஜர் மரம் என்று புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார் பிரான்சின் மெட்ஸ் பகுதியை சேர்ந்த விஞ்ஞானி விவியன் முல்லர்.
இதுகுறித்து முல்லர் கூறுகையில், சூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் முறை தான் போன்சாய் சார்ஜர் உருவாக்கும் திட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது. இதற்கு எலக்ட்ரீ என்று பெயர் வைத்திருக்கிறேன்.
இதை உருவாக்க 3 ஆண்டுகள் ஆனது. வீட்டில் ஜன்னல், கதவு அருகில் என சூரிய ஒளி படும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். நல்ல வெயிலில் முழுவதாக சார்ஜ் ஏற 36 மணி நேரம் ஆகும். மழை, பனி காலத்தில் சற்று அதிக நேரம் ஆகும்.
சூரிய ஒளியை கிரகிக்கும் வகையில் நுண்ணிய சோலார் பேனல்கள் கொண்ட 27 இலைகள் இதில் உள்ளன. இலைகளில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர அமார்பஸ் சிலிகான் சோலார் பேனல்கள் சூரிய வெப்பத்தை எளிதில் கிரகித்துக் கொள்ளும்.
மேலும் இதன் மூலம் உருவாகும் எரிசக்தியை மரத்தின் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட பேட்டரி தக்கவைத்துக் கொள்ளும். முழுவதுமாக சார்ஜ் செய்யப்படும் எலக்ட்ரீ 13,500 மில்லி ஆம்பியர் அளவு எரிசக்தியை தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும்.
இதன் மூலம் செல்போன், ஐபோன், யுஎஸ்பி சாதனங்கள், ஸ்மார்ட் போன்கள், எம்பி 3 பிளேயர் போன்றவற்றை எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றார்.

பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடும் ரோபோ (வீடியோ இணைப்பு)


உலகின் பிரமாண்டமான வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கண்காட்சி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றதில் உலகம் முழுவதிலுருந்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
வியட்னாமை சேர்ந்த டோஸி ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் இந்த சிறிய ரோபோவில் ஸ்பீக்கருடன் பாட்டு கேட்கலாம்.
பாடலுக்கு ஏற்றாற் போல் ரோபோ நடனமாடவும் செய்யும். ‘எம் ரோபோ அல்ட்ரா பாஸ்’ என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

230Kmph வேகத்தில் பயணிக்கும் 1000 கார்களுடன் பிரம்மாண்டமான விளையாட்டு! (வீடியோ இணைப்பு)


Chris Burden என்ற கலைஞரின் நான்கு வருட உழைப்பின் பயனாக தோற்றம் பெற்றதுதான் இந்த பிரம்மாண்டம், 1,100 சிறியரக விளையாட்டுக்கார்கள் 230kmph என்ற கதியில் செல்லுமாறு பாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன
இந்த கார்களுக்கு எந்தவித எரிபொருளும் தேவையில்லை, சாய்வை அடிப்படையாக வைத்தே இவை செயற்படுகின்றன,
வீடியோ

பிளக்பெரி 10′ ஐ நம்பியிருக்கும் ‘ரிசேர்ச் இன் மோசன்.


ஆர்.ஐ.எம். நிறுவனமே பிளக்பெரி கையடக்கத்தொலைபேசிகளை தயாரிக்கின்றது
ஆர்.ஐ.எம் என்றறியப்பட்ட ‘ரிசேர்ச் இன் மோசன்’ (Research In Motion) நிறுவனம் கனடா நாட்டைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மற்றும் கம்பி இல்லா சாதன தயாரிப்பு நிறுவனமாகும்.
பிளக்பெரி கையடக்கத் தொலைபேசிகள் அவற்றின் தொழிநுட்ப அம்சங்களுக்கு மட்டுமன்றி அவற்றின் பாதுகாப்பான தகவல் சேவைகளுக்கும் பிரபல்யம் பெற்றது
குறிப்பாக பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலம் தகவல்களை அதி வேகமாகவும் பாதுகாப்பாகவும் பரிமாற்றமுடியும்.
இதன் சிறப்பம்சம் என்னவெனில் பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலம் தகவல்களை அனுப்பும் போது அவற்றின் மென்பொருள் குறியீட்டுச்சொற்களை (என்கிறிப்ஷன்) பரிசீலிக்க முடியாது.
பிளக்பெரியின் விற்பனையானது அப்பிளின் ஐ போன் மற்றும் அண்ட்ரோய்ட் சாதனங்களின் வருகையால் பெரிதும் குறைந்துள்ளது.
புதுப்போட்டிகளுக்கு முகங்கொடுக்கமுடியாமல் பிளக்பெரி தற்போது திணறி வருகின்றது.
மேலும் பங்குச்சந்தையிலும் ஆர்.ஐ. எம் நிறுவனத்திற்கு வீழ்ச்சியே மிஞ்சியது.
பிளக்பெரி நிறுவனதின் தொடர்ச்சியான வீழ்ச்சியையடுத்து அந்நிறுவனத்தினை பிரபல நிறுவனங்கள் வாங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
எனினும் அந்நிறுவனம் அச் செய்தியினை வதந்தி எனக்கூறி மறுத்தது.
தற்போது ஆர்.ஐ.எம். நிறுவனம் பெரும் இக்கட்டான நிலையில் உள்ள போதிலும் அதன் இறுதி நம்பிக்கை ‘பிளக்பெரி 10 இயங்குதளத்தின் மீதாகும்.
பிளக்பெரி 10 இயங்குதளத்தில் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகளை வெகுவிரைவில் அந்நிறுவனம் சந்தைப்படுத்தவுள்ளது.
பிளக்பெரி லண்டன், பிளக்பெரி மிலான் ஆகிய 2 மொடல்கள் சந்தைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் பிளக்பெரி லண்டன் dual-core 1.5GHz CPU, 1GB of RAM, 16GB of onboard storage, and front and rear cameras ஆகிய தொழிநுட்ப வசதிகளைக் கொண்டிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தனது இறுதி அஸ்திரமான ‘பிளக்பெரி 10′ இயங்குதளத்தின் மீதான வரவேற்பைப் பொறுத்தே ஆர்.ஐ.எம் தனது அடுத்தக்கட்ட முடிவுகளை மேற்கொள்ளுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கண்ணாடிமயமான புதிய வகை சுற்றுலா விமானங்கள் : 2050 இல் பயணிக்கலாம்!(வீடியோ, படங்கள் இணைப்பு)


2050 களில் சேவைக்கு வரவுள்ள புதிய வகை சுற்றுலா பயணிகள் விமானத்தின் மாதிரி வடிவத்தை பிரபல Airbus விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விமான இருக்கைகளை சுற்றியுள்ள அனைத்து கூரை பகுதிகளும் முழுவதுமாக கண்ணாடியால் வடிவமைப்பதன் மூலம்…
விமான பயணிகளுக்கு முகில்களின் மேல் பறக்கும் அனுபவத்தையும் வானத்தில் அந்தரத்தில் மிதக்கும் உணர்வுகளையும் கொண்டுவர போகிறார்களாம்.
வெளி காலநிலைக்கு ஏற்ப விமானத்தில் வெப்பநிலையை சரிசெய்தல், பகல், இரவு காலங்களுக்கு ஏற்பட விமானத்தின் உட்புறத்திலும் வண்ணங்கள், மின் ஒளியை மாற்றல் என முற்றிலும் நவீன மயமாக அறிமுகமாகும் இவ்விமான சேவை பாரிஸில்ருந்து நியூயோர்க்கிற்கு முதல் உத்தியோகபூர்வ சேவையை தொடங்கும் என்கிறார்கள்.

புதிதாக உற்பத்தியாகும் கார்கள் (வீடியோ இணைப்பு)


வாகனத் தொழில்துறை உலகில் பல்வித கார்களை வடிவமைத்து மேம்படுத்தி, சந்தையிட்டு விற்பனை செய்கிறது. இவ்வகையான கார்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படுகிறது.
கார்களை தயாரிப்பதற்கு இயந்திரங்கள் மட்டுமின்றி மனிதர்களின் பங்கும் இன்றியமையாத ஒன்றாகும். இங்கு காணப்படும் காணொளியில் கார்களை தயாரிப்பதைக் காணலாம்.

வாகனத்தின் தரத்தினை வித்தியாசமாக பரிசோதிக்கும் முறை (வீடியோ இணைப்பு)

வாகன தயாரிப்பாளர்கள் பலவகையான புதிய வாகனங்களைத் தயார் செய்துவருகின்றனர். இவ்வாறு புதிதாக தயார் செய்யும் வாகனத்தை சரிபார்க்க பல்வேறு விதமான சோதனைகளை மேற்கொள்வதுண்டு.
மேலும் புதிய வகையான வாகனங்களின் தரத்தினை மக்களின் பார்வைக்கு கொண்டு சொல்வதற்காக பலவித விளம்பரங்களைச் செய்கின்றனர். அவ்வாறு காணப்படும் வித்தியாசமான விளம்பரத்தினைக் காணொளியில் காணலாம்.

சுயமான சமநிலையை கொண்டுள்ள ஒற்றைச்சில்லு வண்டி (வீடியோ இணைப்பு)

போக்குவரத்தை இலகுவாக்கவும், விரைவுபடுத்தவும் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை இன்றும் செலுத்தத் தெரியாதவர்கள் இருக்கிறார்கள். காரணம் துவிச்சக்கர வண்டியை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இல்லாமையாகும்.
ஆனால் இப்பொழுது அவர்களும் செலுத்தக்கூடிய வகையில் புதிய ஒற்றைச்சில்லு வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் வண்டியானது சுயமாகவே சமநிலை பெறும் ஆற்றலை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது version 2.0 ஆகும்.
1000 வாட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டர் பொருத்தப்பட்டள்ள இந்த வண்டிக்கு மின்சாரம் வழங்குவதற்கென விசேட லிதியம் அயரன் நனோ பொஸ்பேற் மின்கலம் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது மணிக்கு 16 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் ஆற்றலை கொண்டுள்ளதுடன் இம் மின்கலத்தை மீள்மின்னேற்றத்திற்கு உட்படுத்துவதற்கு இரண்டு மணித்தியாலங்கள் போதும் அதற்கான செலவு அமெரிக்க டொலர் பெறுமதியில் இரண்டு சதங்களாகும்.
மேலும் 13 கிலோ நிறையுடைய இவ்வண்டியின் பெறுமதி 1,499 அமெரிக்கா டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரையும் அசரவைக்கும் குழந்தை ரோபோ (வீடியோ, படங்கள் இணைப்பு)

மனிதன் தனது வேலைகளை சுலபமாக்குவதற்கு தனக்கு நிகரான இயந்திரங்களை உருவாக்கி வருகின்றான். அவற்றுள் ஒரு அம்சம்தான் ரோபோ எனப்படும் இயந்திர மனிதன். இவ்வாறு பலவிதமான ரோபோக்களை உருவாக்கியதன் பின் இப்பொழுது குழந்தை ரோபோவையும் உருவாக்கியுள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த க்ரிஸ் கிளார்க் என்பரால் உருவாக்கப்பட்ட இக்குழந்தை ரோபோவானது உண்மையான குழந்தையைப் ​போன்று அசைவுகளை இயல்பாகவே மேற்கொள்ளுகின்றது. அவ்வாறு மேற்கொள்ளும் அசைவுகளை காணொளியில் காணலாம்.

விமானம் தயாராகும் முறை (வீடியோ இணைப்பு)

பொதுவான கட்டிடம் என்பது மனிதர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்படும் அமைப்புக்களைக் குறிக்கும். இங்கே வாழ்வது என்பது உணவு சமைத்தல், சாப்பிடுதல், தூங்குதல், விருந்தினர்களை வரவேற்றல், வருமானம் தரும் செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை உள்ளடக்கும். மேலும் இது தனியாகவோ, பல குடும்பங்கள் சேர்ந்து கூட்டாகவோ மேற்கூறியவற்றில் ஈடுபடுவதையும் குறிக்கும். மிகப் பழங்கால மனிதர்கள் குகைகளிலே வாழ்ந்தனர். பல்வேறு காரணங்களால் குகைகள் இருக்குமிடங்களை விட்டு நெடுந்தூரத்தில் இயற்கை சீற்றங்களிலிருந்தும், காட்டு விலங்குகளிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அமைத்துள்ளனர்

இன்னும் 3 வருடங்களில் விண்டோஸ்!

விண்டோஸ் கையடக்கத்தொலைபேசிகளானது இன்னும் 3 வருடங்களில் அப்பிளின் ஐ போனை முந்துமெனவும், அதிகம் விற்பனையாகும்
கையடக்கத்தொலைபேசிகளின் வரிசையில் இரண்டாவது இடத்தினைப் பெறுமெனவும் ‘ஐ சப்ளை’ என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
இவ்வரிசையில் அண்ட்ரோய்ட் முதல் இடத்தினைப் பெறுமெனவும் ஐ சப்ளை தெரிவிக்கின்றது.
விண்டோஸின் இவ்வளர்ச்சிக்கு நொக்கியாவே பிரதான பங்குவகிக்குமெனவும் அந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இம் மாதம் நடைபெற்ற பாவனையாளர் இலத்திரனியல் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நொக்கியா லுமியா 900 கையடக்கத்தொலைபேசியானது பலரினது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.
விண்டோஸ் மூலம் இயங்கும் இக்கையடக்கத்தொலைபேசியானது நொக்கியா, மைக்ரோசொப்ட் கூட்டணியில் வெளியாகிய 3 ஆவது கையடக்கத் தொலைபேசியாகும்.
இதற்கு முன்னர் வெளியாகிய நொக்கியா லுமியா 800, 710 ஆகிய கையடக்கத்தொலைபேசிகள் பெரிதாக பாவனையாளர்களைக் கவரவில்லை.
ஆனாலும் லுமியா 900 இன் அறிமுகமானது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
இம்மாதிரியானது பாவனையாளர்களின் நொக்கியாவுக்கு மட்டுமன்றி விண்டோஸிற்கு பெரிய திருப்பு முனையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வருடம் விண்டோஸ் கையடக்கத்தொலைபேசிகளின் உலகளாவிய சந்தைப்பங்கு வெறும் 2 % ஆகும்.
எனினும் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டளவில் இது 16.7 ஆக உயரும் என ஐ சப்ளை எதிர்வு கூறியுள்ளது.
மேற்காட்டப்பட்டுள்ளவாறு அண்ட்ரோய்ட் 2015 ஆம் ஆண்டளவில் 58.1% சந்தைப்பங்கைப் பெறுமெனவும் அப்பிளின் ஐ ஓஎஸ் அதாவது ஐ போன்கள் 16.6 % பங்கை மட்டுமே பெற்று 3 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடையுமெனவும் ஐ சப்ளை தெரிவிக்கின்றது.
நொக்கியா தனது அமெரிக்கச் சந்தையின் மீது அதிக அக்கறைகொள்ள வேண்டுமெனவும், அவ்வாறு அமெரிக்காவில் நொக்கியா வெற்றியடைந்தால் அதனால் இழந்த சந்தையினை இலகுவாக மீளப்பெற முடிவதுடன் விண்டோஸும் இலகுவாக சந்தையில் தனது ஆதிக்கத்தினை அதிகரிக்கமுடியுமெனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கைபேசியில் விளையாடும் வித்தியாசமான விளையாட்டு (வீடியோ இணைப்பு)

உலகில் பலவேறான கைபேசிகள் வந்துவிட்டன. இக்கைபேசிகளின் மூலம் பலவகையான பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறான கைபேசியில் வித்தியாசமான விளையாட்டும் காணப்படுகிறது.
அவ்வகையான விளையாட்டினை(angry bird) காணொளியில் காணலாம்

3.45 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட ஆடம்பர கார் (வீடியோ இணைப்பு)


உலகில் பலவித கார்களை வடிவமைத்து மேம்படுத்தி, சந்தையிட்டு விற்பனை செய்து வருகிறது வாகனத் தொழிற்சாலை. இவ்வகையான கார்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படுகிறது.
Rolls-Royce Ghost என்ற ஆடம்பரமான கார் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட காரின் மதிப்பு 3.45 கோடியாகும். இக்காரில் தொலைக்காட்சி, வானொலி, படப்பிடிப்புகருவி மற்றும் பல்வேறு வசதிகளைக் கொண்டு காணப்படுகின்றது.
மேலும் இக்கார் 1லட்சம் டொலர் முன் தொகை செலுத்தி உறுதி செய்த பின்பு 6 மாத இடைவெளிக்கு பின்பு தான் கிடைத்துள்ளது.
இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு கடல்வழியாக வந்த இக்கார் தற்போது இந்தியாவில் கேரளாவில் கொச்சியில் இருக்கும் GPC. நாயர் என்பவர் இதன் உரிமையாளர் ஆவார்.

உயர் தொழிநுட்பத்​துடன் வெளிவரவிரு​க்கும் புதிய ஜ பாட் !!


நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அப்பிள் நிறுவனமானது வரும் மார்ச் மாதமளவில் உயர் வரையறை (High-Definition) கொண்ட திரை மற்றும் தற்பொழுது காணப்படும் ஜ பொட்களிலுள்ளதை விடவும் வேகமான புரோசசரை கொண்ட புதிய ஜ பாட் ஐ வெளியிட இருக்கி்ன்றது.
இதில் வயர்​லெஸ் தொழில்நுட்பமும் காணப்படுவதுடன், கடந்த தலைமுறை ஐ பாட்களை விடவும் வேகம் அதிகமாக காணப்படுமாம். இதன் பகுதிகள் ஆசியாவிலுள்ள பொக்ஸ்கோன் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய செல்போனுக்கு பணம் தரும் ஏ.டி.எம்! அமெரிக்காவில் அதிரடி அறிமுகம்(வீடியோ இணைப்பு)


எங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை இலகுவாக எடுக்கலாம் என்பது மட்டும் தான்.
ஆனால் அமெரிக்காவில் இதையெல்லாம் விட ஒரு படி தாண்டிப் போய் ஏ.டி.எம் மூலம் இன்னொரு புதிய விடயத்தையும் சாதித்துள்ளனர்.
ஆம், உங்களிடம் இருக்கும் பழைய செல்போனை ஏ.டி.எம் இல் செலுத்தி அதற்குரிய பணத்தை உடனே பெற்றுக் கொள்ளலாம்.
செல்போன் மட்டுமில்லை… பழைய mp3 பிளேயர்கள், ஐ போன் போன்றவற்றுக்கும் பணத்தினைப் பெற முடியும்.
அமெரிக்காவில் உள்ள பிரபல நகரான Las Vegas இல் இடம்பெற்ற சர்வதேச எலக்ரோனிக் வாடிக்கையாளர் கண்காட்சியில் தான் குறித்த ஏ.டி.எம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடுதிரையுடன் கூடிய ஏ.டி.எம் இயந்திரத்தின் முன்பக்கத்தில் செல்போனை வைத்தால் அதனை ஸ்கான் பண்ணி அதன் விலையை எளிதாக மதிப்பிட்டு விடும்.
இது ஒரு சூழல் பாதுகாப்பு திட்டமாகவும் நோக்கப்படுகின்றது. பல்வேறு செல்போன் நிறுவனங்களுடனும் தொடர்புபட்டிருப்பதால் ஏ.டி.எம் மையங்கள் மூலம் சேகரிக்கப்படும் பழைய செல்போன்கள் மீள் சுழற்சிக்கு உள்ளாவது எளிதாக்கப்படுகின்றது.